முன்னேற்றமடையும் அமெரிக்க ஆப்கான் உறவு: இரு நாடுகளுக்கிடையில் கைதிகள் பரிமாற்றம்!

Date:

கான் முஹம்மத் என்ற ஆப்கானிஸ்தான் பிரஜை கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவில்  சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வின் விளைவாக இந்த  கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

கான் மொஹமட் என்ற ஆப்கானிஸ்தான் குடிமகன், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலிபோர்னியா மாநிலத்தில் தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார்.

அவர் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இரண்டு அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார், ஆனால் அவர்களை அடையாளத்தை வெளிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.

ஆப்கானிஸ்தான் தாலிபான் மற்றும் அமெரிக்கா இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் அமைந்ததாகவும் கத்தாரும் தனது பங்கை ஆற்றியதற்காகவும் அமைச்சகம் பாராட்டியது.

மேலும் தலிபான் இடைக்கால நிர்வாகம் இந்த பரிமாற்றத்தை ‘உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு’ என்று கருதுகிறது.

 

 

 

 

Popular

More like this
Related

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள்...

கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம்,...

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று...