முழு உலகமும் அமைதியும் செழிப்பும் அடைய இறைவன் அருள் புரியட்டும் என்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது சார்பிலும் இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் எனது சக ஊழியர்களின் சார்பிலும் இலங்கை நட்பு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாண்டு இலங்கைக் குடியரசிற்கும் அதன் மேன்மைமிகு மக்களுக்கும் நன்மை, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும்.
எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவு அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் எனவும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.