ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் மிரிஹான பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று காலை உதயங்க வீரதுங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதயங்க வீரதுங்கவை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.