அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில்
ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீக்கிரையான வீடுகளின் புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை பதறவைத்துள்ளது.
7ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் நாசம் செய்து வருகிறது. காற்றின்வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவி வருகிறது.
காட்டை சூறையாடிய தீ அப்பகுதியில் சுற்றி வசிக்கும் மக்களின் வீடுகளையும் விட்டுவைக்கவில்லை. மளமளவென பரவிய தீ மக்களின் வீடுகளை இறையாக்கியது.50,00க்கும் அதிகமானோரின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் தீயில் கருகி நாசமாகின.
அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
கட்டுக்கடங்காத காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வரும் நிலையில் இடைவிடாமல் வீசும் காற்று சோதனையை அதிகப்படுத்துகிறது.
வரலாறு காணாத பேரழிவை காட்டுத்தீ ஏற்படுத்தியுள்ளது.இரவும் பகலாக காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
தீயை அணைக்க பல விதமாக முயற்சிகளை மேற்கொண்டாலும் காற்றின் வேகம் பணியை தொய்வடைய செய்கிறது. காட்டுத்தீயின் வேகம் மற்றும் இருப்பிடத்தை கண்காணிக்க செயற்கைகோள் உதவியை நாடி வருகின்றனர்.
லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா காட்டுதீ மிக பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Photo credit: Pti