ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்

Date:

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, அரசியல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நோக்கங்களை கருத்தில் கொண்டும், போருக்கான காரணம் நிறைவேறியதாலும், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும் 15 மாதப் போரை ஆரம்ப ஆறு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஸாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர். எனினும் இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...