அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் டெல் அவிவிற்கு விஜயம்: பைடன் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட கனரக வெடிகுண்டு இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்தன!

Date:

அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் டெல் அவிவ் பகுதிக்கு தற்போது வருகைத் தருகின்ற நிலையில் ‘MK 84’ வகை கனரக குண்டுகள் இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளன. இதை பைடன் நிர்வாகத்தில் விநியோகிக்காமல் தடைசெய்யப்பட்ட யுத்த உபரணங்களாகும்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை, ‘Mk 84’ வகை கனரக குண்டுகள் அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தியது.

காசா ஒப்பந்தம் மற்றும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ டெல் அவிவ் பகுதிக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், நேற்றிரவு இந்த கப்பல் வந்து சேர்ந்ததாக சேனல் 12 இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல்  பொதுமக்கள் மீது இந்த குண்டுகளை வீசிய பின்னணியில்  பைடன் நிர்வாகம் இந்த குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்குவதை நிறுத்தியது.

பைடன் நிர்வாகம் ஏற்றுமதியை நிறுத்திய பிறகும் மற்றொரு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கியது.

84 ரககுண்டுகள் (சுமார் 900 கிலோ) வெடிக்கும் இடத்திலிருந்து 360 மீற்றர் தொலைவில் இருக்கும் மனிதர்களையும் கொல்லும் அளவுக்குத் திறனுடையது. மேலும், 800 மீற்றர் தொலைவில் உள்ள கட்டடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையில்தான், போரில் ஏற்பட்ட அதிகளவிலான உயிரிழப்புகள் காரணமாக 84 ரக குண்டுகள் ஏற்றுமதியை ஜோ பைடன் நிறுத்தினார். ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்னதாகவே, ஜோ பைடன் ஆட்சியில் சுமார் 14,000 மார்க் 84 ரககுண்டுகள் உட்பட பல்வேறு வகையான குண்டுகளும் ஏவுகணைகளும் அளிக்கப்பட்டன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...