இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு: ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது.

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் இரு நாடுகளுக்கும் இடையிலான 70 வருட நட்புறவை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் புதிய அரசாங்கங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு அவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை இந்தோனேசியாவிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகால மற்றும் சுதந்திர வர்த்தக்க ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் சந்தைகளை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இந்தோனேசிய பிரதி தூதுவர் பிகீ ஒக்டானியோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...