எமது தேசத்தின் பெருமையை உலகறியச் செய்வோம்: சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

Date:

இலங்கையின் சுதந்திரத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசத்தினை கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் பயணிப்பது காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கெம்பஸ் நிறுவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் புரிந்துணர்வுடனும், தியாகங்களுடனும் எமது நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையின் 77வது சுதந்திரத் தினத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை அடக்கு முறையாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 77 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இன்னும் எமது நாடு பொருளாதார, கலாசார மற்றும் இதர துறைகளிலும் பின்தங்கிய நிலையினையே கண்டுள்ளது.

இதற்கு காரணம் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தனையின் வீரியம் குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக பல்லின அழகான சமூக கட்டமைப்பினை கொண்ட எமது தாய் நாட்டின் பெருமையை உலகறியச் செய்வது எமது கடமையாகும்.

எமது தேசத்தின் அடையாளமே எமது வேட்கை என்பதை புரிந்து எம்மில் காணப்படும் மாற்று சிந்தனைகளை புறந்தள்ளி இலங்கையின் பிரகாசத்திற்கும்,  புரிந்துணர்வு, அன்பு பறிமாற்றம், பரஸ்பரம் என்பனவற்றினை சிரம் கொண்டு பயணிக்கும் நாளாக இன்றைய சுதந்திர தினம் அமைய வேண்டும் என இல்ஹாம் மரைக்கார் மேலும் தமது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...