‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை: பெண் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம்

Date:

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டிற்குள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், நாட்டை விட்டு வெளியேறக்கூடியதாகக் கருதப்படும் அனைத்து இடங்களுக்கும் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியைக் கோருகின்றோம். குறித்த பெண் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா  சன்மானம் வழங்கப்படும் என்றார்.

கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபருக்கு ஆயுதத்தை வழங்கியவர் கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு முகவரியில் வசிக்கும் 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற இளம் பெண்ணாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 10ஆம் திகதி கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போதும், இந்த சந்தேகநபராலேயே ரி – 56 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து இந்த கொலைகள் திட்டமிடப்பட்டு வழி நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...