கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு: ஜனாதிபதி

Date:

ஜூலை முதல் மூத்த குடிமக்கள் வட்டி மானியத்துக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளோம் என் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முந்தைய நிர்வாகம் வரையறுக்கப்பட்ட வரி வருவாயை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை நாங்கள் அறிவோம். வரையறுக்கப்பட்ட வரி நிதியை விவேகமாகவும் பொறுப்புடனும் நிர்வகிப்பதே எங்கள் நோக்கம்.

2028ல் கடனை செலுத்தத் தொடங்கும் பொருளாதார சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது எமது முதல் படி இந்த ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டெலர் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏற்றுமதியை விரிவுபடுத்துதல். தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறதுடன் நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க பயன்படுகிறது.

கல்வி, சுகாதாரத் துறைக்கு எப்போதுமில்லாதளவுக்கு உயர்ந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உயர்தர, மலிவு விலையில் மூலப்பொருட்களை அணுகுவதற்கான தடைகளை அகற்ற, எளிமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வரி கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். என்றும் இலங்கையின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த வலையமைப்பு விரிவாக்கப்படும்.

அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படுவதுடன் பொருளாதார மாற்ற சட்டம் திருத்தப்படும்.

இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் விரிவுபடுத்தப்படும் என்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வருமானம் மற்றும் இழப்புகளை நாட்டு்ககு திருப்பி அனுப்புவதை கண்காணிக்க பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் பொது சேவையை டிஜிட்டல் மயமாக்கப்படும்.

நாட்டில் வணிகம் செய்வதற்கான வசதிகள் அதிகரிக்கப்படுவதுடன் திவால் நிலை தொடர்பான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும்.

பொது – தனியார் கூட்டாண்மை தொடர்பான புதிய சட்டமூலம் முன்வைக்கப்படும் எனவும் பொருளாதார மாற்றச் சட்டம் திருத்தப்படும்.

பொது-தனியார் கூட்டாண்மை குறித்து ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டுக்குள் தேசிய தரத்தை முகாமைத்துவ செய்ய முறைமையொன்று அவசியம். அதற்கு இந்த வருடத்திற்காக 750 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம்.

துறைமுக நெரிசலுக்கான நீண்ட கால தீர்வுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். துறைமுகத்தில் கொள்கலன் முகாமைத்துவத்தை வினைத்திறனாக்க ஐநூறு மில்லியன் ரூபாய். வெயங்கொடையில் உள்நாட்டில் கொள்கலன் முற்றம் நிறுவப்பட்டு வருகிறது.

உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக அரசுக்குச் சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...