கொழும்பு ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்யும் உலமாக்களுக்கான ரமழான் செயலமர்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடு பூராகவும் இயங்கி வருகின்ற தனது கிளைகளினூடாக பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உலமாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.

இந்த வகையில் உலமா சபையின் கொழும்பு கிழக்கு கிளை எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கு  நோன்பு தொடர்பான மார்க்க சட்ட் விளக்க செயலமர்வு இம்மாதம் 26ஆம் திகதி கொத்தட்டுவை நாஸ் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் வளவாளராக பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அக்ரம் அபுல் ஹஸன் (நிழாமி, மதனி) M.A அவர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றவுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு அஷ்ஷைக் எம்.எப்.எம்.சல்மான் (இன்ஆமி) 0774197447 செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளை

அஷ்ஷைக் எச்.எம்.அஸாத் (இஹ்ஸானி) 0750768175 உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளை ஆகியோரை தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...