இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய ‘பிறப்பும் சிறப்பும்’ என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி ஷார்ஜாவிலுள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி, இலங்கை இஸ்லாமிய இலக்கியக் கழகம் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.