பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவு: பாதுகாப்பு செயலாளர்

Date:

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்று (24) காலை ஆராய்ந்தது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா  குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...