பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

Date:

பிரபல தொழிலதிபரும் வர்த்தகருமான டொன் ஹெரோல்ட் ஸ்டாசன் ஜெயவர்தன தனது 82 ஆவது வயதில் காலமானார். இவர் ஹரி ஜெயவர்தன என்று அழைக்கப்படுவார்.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஜா எல பிரதேசத்தில் ஹரி ஜயவர்தன பிறந்தார்.

ஜெயவர்த்தன Melstacorp PLC நிறுவனத்தின் தலைவராவார்.  இலங்கையில் டென்மார்க் தூதரகத்தின் கௌரவ துணைத் தூதராக பணியாற்றியுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கையால் இலங்கையின் செல்வந்தர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.

அமெரிக்காவிற்கு வெளியே போர்ப்ஸ் பத்திரிக்கையின் சிறந்த நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அங்கரீகாரம் பெற்ற இலங்கையின் முதல் இரண்டு நிறுவனங்களான டிஸ்டில்லரீஸ்  மற்றும் எய்ட்கன் ஸ்பென்ஸ் ஆகிய நிறுவனங்களில் தலைவர் பதவியை வகித்தார் ஹரி ஜெயவர்தன.

இலங்கையின் கூட்டாண்மை கலாசாரத்தை கட்டமைப்பதில் ஹரி ஜயவர்தனவின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...