மற்றுமொரு பலஸ்தீன கைதிகள் தாய் நிலத்தில் முத்தமிட்டு (ஸுஜூது) செய்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்..!

Date:

காசா பகுதியில் போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் முடிவுக்கு வரவுள்ள சில நாட்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

அதற்கு ஈடாக நான்கு பணயக்கைதிகளின் உடல்களை வியாழன் (27) அதிகாலை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

ஹமாஸ் பணயக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தினார்.

ஒப்படைக்கப்பட்ட உல்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது.

அதே நேரத்தில், விடுவிக்கப்பட்ட பல பலஸ்தீனிய கைதிகளை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சங்க வாகனத் தொடரணி ஒன்று இஸ்ரேலின் ஆஃபர் சிறையிலிருந்து மேற்குக் கரை நகரமான பெய்டுனியாவை நோக்கிச் சென்றது.

பஸ்களில் விடுவிக்கப்பட்ட கைதிகளை பார்வையிடுவதற்காக அங்கு நூற்றுக்கணக்கான நலன் விரும்பிகள் கூடியிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கட்டிப்பிடித்தும், புகைப்படங்கள் எடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

600க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்த போது பணயக்கைதிகளை கொடூரமாக நடத்தியதை எதிர்த்து இஸ்ரேல் சனிக்கிழமை முதல் அவர்களது விடுதலையை தாமதப்படுத்தியது.

இந்த தாமதத்தை போர்நிறுத்தத்தின் “கடுமையான மீறல்” என்று கூறிய போராளி குழு, பலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படும் வரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது.

போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் நடைமுறைக்கு வந்தது, பல பின்னடைவுகள் இருந்தபோதிலும், பெரும்பாலும் அமுலில் இருந்தது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சங்கத் தொடரணி இஸ்ரேலின் ஓஃபர் சிறைச்சாலையிலிருந்து மேற்குக் கரை நகரமான பெய்டுனியாவை நோக்கிச் சென்றது, அங்கு நூற்றுக்கணக்கான நலம் விரும்பிகள் பேருந்து வந்தபோது அதைப் பார்க்க விரைந்து சென்றனர்.

பலஸ்தீன கைதிகள் தாய் நிலத்தில் முத்தமிட்டு (ஸுஜூது) செய்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நண்பர்களும் குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்ட கைதிகளை வரவேற்று, அவர்களைக் கட்டிப்பிடித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.  அவர்கள் ,”கடவுள் பெரியவர்” என்று கோஷமிட்டனர். விடுவிக்கப்பட்ட கைதிகள் இஸ்ரேலிய சிறை சேவை டி-சர்ட்களை அணிந்திருந்தனர், அவர்களில் சிலர் அவற்றை கழற்றி தீ வைத்தனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...