ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்!

Date:

ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான  மூன்று நாள் பயிற்சி முகாமொன்றை மள்வானை அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த கற்கை நெறி எதிர்வரும் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் காலை 09:30 – 10:30 நடைபெறவுள்ளதுடன்  பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கற்கை நெறி தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:

1- நோன்பு பற்றிய பொதுவான அடிப்படைகள்
2- ரமழானின் சிறப்பு, அதன் விசேடங்கள், அதில் நோன்பு நோற்பதன் சட்டம் மற்றும் அம்மாதத்தை ஆரம்பித்து முடிக்கும் முறைகள்.
3- ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள்.
4- நோன்பை முறிக்கும் காரியங்களும் அவற்றுடன் தொடர்பு பட்ட விடயங்களும்.
5- நோன்பின் வகைகள்.
6- நோன்புடன் தொடர்பு பட்ட பொதுவான சட்டங்களும் நவீன சிக்கல்களும் அதை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களும்.
7- கேள்வி பதில் அமர்வு

குறித்த பயிற்சி முகாமில் வளவாளர்களாக கலாநிதி M.H.M Azhar (PhD) உஸ்தாத் M.A.A.M Zafar (BA, Al – Madina) உஸ்தாத் M.M.A Imthiyaz (BA – Al – Madina) உஸ்தாத் A.C Yasar (BA, M.Ed – Al – Madina) கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கற்கை நெறியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் பின்வரும் இணைப்பினூடாக முன்பதிவு செய்து கொள்ளவும்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...