அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
இதற்கிடையில், 2025 வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அமைச்சர்கள் குழுவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டனர்.