ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) மூலம் சவூதி தேசிய கீதம் மறு வடிவமைப்பு!

Date:

சவூதி அரேபியா, தனது தேசிய கீதமான “ஆஷ அல்-மலிக்” (அரசன் வாழ்க) என்பதை உலகப் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரால் மறுவடிவமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இக் கீதம் 1947-ல் எகிப்திய இசையமைப்பாளர் அப்துல் ரஹ்மான் அல்-காதீப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த முயற்சி சவூதி அரேபியாவின் “விஷன் 2030” திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது நாட்டின் கலாச்சார மற்றும் பொழுதுபோக்குத் துறையில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹான்ஸ் ஜிம்மர் சவூதி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட “அரேபியா” என்ற புதிய இசைப் படைப்பை உருவாக்குவதற்கும், சவூதி திரைப்படமான “The Battle of Yarmouk” இன் ஒலிப்பதிவை உருவாக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதான ஹான்ஸ் ஜிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150க்கும் மேற்பட்ட திரபடங்களுக்கு இசையமைத்துள்ளார்.

லயன் கிங், இன்டெர்ஸ்டெல்லர், மேன் ஆப் ஸ்டீல், டார்க் நைட் டிரிலாஜி, இன்செப்சன் போன்ற திரைபடங்களுக்கு இசையமைத்ததமைக்காக விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இவர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...