இலங்கையில் கண்பார்வை குறைபாட்டை தீர்க்கும் சவூதியின் மற்றுமொரு திட்டம் காத்தான்குடியில் நிறைவு

Date:

சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக, இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள “காத்தான்குடி” அரச மருத்துவமனையில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம் ஒன்றை இம்மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.

இது போன்றதொரு தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரண மையம் கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  இலங்கையின் கிழக்குப் பகுதியில் “காத்தான்குடி” பிரதேசத்தில் மேற்கொண்டது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் , தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெறும்.

இத்திட்டத்தின் ஊடக  மருத்துவ பரிசோதனைகள்: 4484, கண்ணாடி விநியோகம்: 974, அறுவை சிகிச்சைகள்: 478  அளிக்கப்பட்டுள்ளன:

மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், பெப்ரவரி 18 முதல் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தெற்கு இலங்கையில் உள்ள “வலஸ்முல்ல” பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க இந்த மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...