இலங்கையில் கண்பார்வை குறைபாட்டை தீர்க்கும் சவூதியின் மற்றுமொரு திட்டம் வலஸ்முல்லயில் நிறைவு

Date:

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக ‘வலஸ்முல்ல’ அரசு மருத்துவமனையில் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியை நடைமுறைப்படுத்தியது.

இதேபோன்றதொரு தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரண மையம் இம்மாதம் 10ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி இலங்கையின் கிழக்குப் பகுதியில் ‘காத்தான்குடி’ பிரதேசத்திலும் மேற்கொண்டது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல், தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெற்றன.

இத்திட்டத்தின் ஊடக மருத்துவ பரிசோதனைகள்: 4723 லென்ஸ் பொருத்துதல்; 457 கண்ணாடி விநியோகம்: 967, 467அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும் உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...