இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
காசாவில் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும் இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது.
அதன்படி, அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் குழுவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ஒடெட் லிப்ஷிட் (வயது 85), ஷிரி பிபஸ் (வயது 32), அவரின் 4 வயது குழந்தை ஏரியல் பிபஸ், 9 மாத கைக்குழந்தை கிபிர் பிபஸ் ஆகியோரின் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
ஆனால், ஒப்படைக்கப்பட்ட உடல்களில் ஷிரி பிபசின் உடல் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஷிரி பிபசின் உடலுக்குபதில் வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதையடுத்து, உடல் மாறிவிட்டதாக கூறிய ஹமாஸ், கொல்லப்பட்ட ஷிரி பிபசின் உடலை இஸ்ரேலிடம் இன்று ஒப்படைத்தது.
ஒப்படைக்கப்பட்ட உடல் ஷிரி பிபஸ் உடையதுதானா? என்பது குறிது இஸ்ரேல் டிஎன்ஏ ஆய்வு நடத்தி வருகிறது.