இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்பு: நெதன்யாகு தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம்

Date:

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்போது தான் அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில் குண்டுகள் வெடித்த நிலையில், அது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே போர் தொடர்ந்து வந்தது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான இந்த போரால் காசா மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. கடந்த மாதம் தான் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானது. தொடர்ந்து மெல்ல அமைதியும் இயல்பு நிலையும் திரும்பி வந்தது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கிறது.

உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை இஸ்ரேலின் மத்திய நகரமான பேட் யாம் அடுத்தடுத்து மூன்று பேருந்துகளில் வெடிகுண்டு வெடித்துள்ளன. முதலில் ஒரு பேருந்தில் வெடிகுண்டு வெடித்த நிலையில், அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகளில் வெடிகுண்டு வெடித்துள்ளன. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று இஸ்ரேல் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தாக்காதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பாதுகாப்பு கூட்டத்தை நடத்தினார். அதேநேரம் இந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னணியில் பலஸ்தீன  அமைப்பு  இருக்கலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக உள்ளூர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.. பேட் யாமில் குறைந்தது மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. மேலும், இரு இடங்களில் குண்டுகள் வெடிக்கும் முன்பு அகற்றியுள்ளோம். எங்கள் வெடிகுண்டு பிரிவுகளைச் சம்பவ இடங்களுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை ஸ்கேன் செய்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் மர்ம பொருட்களைப் பார்த்தால் எச்சரிக்கையாக இருக்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பேருந்துகள் முழுமையாக எரிந்த நிலையில் உள்ள காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 3 வெடிகுண்டுகள் வெடித்த நிலையில், இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் வேறு பேருந்துகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய, நாடு முழுவதும் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களைச் சோதனைக்குட்படுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் அல்லது யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...