முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அரபு எழுத்தணிக் கலையில் உலகப் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படும் உஸ்தாத் ஃபரீத் அலி இவ்வருடம் 2025 மே மாதம் 20 முதல் 30 வரை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற அரபு எழுத்தணி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைத் தரவுள்ளதாக இலங்கை அரபு எழுத்தணிக் கலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் உள்ள இஸ்லாமியக் கலை நிலையத்தின் இயக்குநராகவும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) சர்வதேச கலை சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ள அவர் சர்வதேச அளவில் பிரபலமான உலகத்தரம் தரம் வாய்ந்த அரபு எழுத்தணி கலைஞராக கருதப்படுகிறார்.
அரபு எழுத்தணி தொடர்பாக 11 கண்காட்சிகளில் கலந்துகொண்டுள்ள அவர் இதுவரை நடாத்தியுள்ள அவர் 35 சரவ்தேச கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
அதேவேளை குவைத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 40 அரபு எழுத்தணி கண்காட்சிகளில் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை முஸ்லிம்களின் மத்தியிலும் அரபு எழுத்தணி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இத்துறையில் இளம் சமுதாயத்தினரை ஈடுபடுத்தும் நோக்கிலும் இலங்கை அரபு எழுத்தணிசங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்துவதற்கு சமூகத்தின் ஆதரவை இதன் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.