உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 187 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டதுடன் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் ஆரம்பமானது.

இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் எதிராக வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தம் இல்லாமல் சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...