எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு..!

Date:

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தீங்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கும் ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை இந்த சந்திப்பின் போது பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதே இக் கலந்துரையடலின் முதன்மை நோக்கமாமாக அமைந்தது.

நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் எனைய கட்சித் தலைவர்களுக்கும் இடையில் ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் ஏனைய கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், பி.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...