எனசல்கொல்ல பழைய மாணவர் சங்கத்தின் 2008 க.பொ.த. சாதாரண தர மாணவர் குழுவினரால் இரு பாடசாலைகளுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்விசை ஈன்பொறி (ELECTRICITY GENERATOR) கையளிக்கப்பட்டது.
எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலை மற்றும் எனசல்கொல்ல மத்திய கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளினதும் பயன்பாட்டிற்காகவே இப்பெறுமதியான மின்விசை ஈன்பொறியினை கையளித்தனர்.
இந்த நிகழ்வில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் உதவி அதிபர் கெளரவத்துக்குரிய ஜெசீம் ஆசிரியர், பழைய மாணவர் சங்கத்தின் ஈபிஎல் நிறைவேற்று குழுவின் பிரதம நிறைவேற்று அதிகார் பாஹிம் ஆசிரியர், எனசல்கொல்ல பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஐ. யாகூப் (இஸ்லாஹி), எனசல்கொல்ல மத்திய கல்லூரியினதும், எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலையினதும் ஆசிரியர்கள், 2008 க.பொ.த. சாதாரண தர மற்றும் 2011 உயர்தர குழுவினர்கள் மற்றும் எனசல்கொல்ல பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.