“ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்”: விவசாயிகளுக்காக விசேட வேலைத்திட்டம்

Date:

நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள “ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” தேசிய திட்டம் இன்று ஆரம்பமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்படாத அனைத்து வயல்களையும் விவசாய நிலங்களையும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக குறித்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில் இன்று (15) பொல்கஹவெல – ஹொதெல்லவில் உள்ள ஜயசுந்தராராம விகாரைக்கு முன்பாக தொடங்குகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வு விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெறுகின்றது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் 566 கமநல சேவைப் பகுதிகளில் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உணவு கையிருப்புகளைப் பராமரித்தல், உள்நாட்டு உணவு நுகர்வு மற்றும் விவசாய பயிர் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு 23ஆம் திகதி வரை தெளிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...