2023 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்காக கட்சிகளாலும் சுயாதீன வேட்பாளர்களாலும் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தினை- திருப்பி செலுத்துவதற்கு நேற்றுமுன்தினம் (17) பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட 2025-1 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் 2(3) பிரிவுக்கு அமைய பற்றுச்சீட்டை முன்வைப்பதன் மூலம் கட்டுப் பணத்தை மீளச் செலுத்த வேண்டும் என குறித்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பற்றுச்சீட்டையும் கட்டுப்பணத்தை மீளப்பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தையும் கட்டுப்பணம் செலுத்திய மாவட்ட அலுவலகத்துக்கு இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஒழுங்கில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அவர்களுடைய கட்டுப்பணத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.