கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கொடூரமான காசா யுத்தம் உலகளவில் மிகப்பெரிய உணர்வலைகளை உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தனர்.
அதேநேரம் பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் காசா மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு கருணைமிக்க நபர், தனது பெயரை குறிப்பிடாமல் அண்மையில் வாங்கிய அதி நவீன காரை முழுமையாக காசா நிவாரண நிதிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
இந்த காரின் பெறுமதி முழுவதுமாக காசா மக்களுக்கான உதவிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய மனிதநேய செயல்கள், உலகம் முழுவதும் மேலும் பரவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.
இத்தகைய மனிநேயமிக்க உணர்வு மிகுந்த செய்கைகள் தொடர்ந்து வர வேண்டும் என அனைவரும் பிரார்த்திபோம்.