அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அங்கே இந்தியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அடுத்தடுத்து செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன்படி பலர் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு முக்கியமான செய்திகள் வெளியாகி உள்ளன
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட வெளியேற்றப்படும் இந்தியர்கள்.
அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டு அகதிகள் முகாம், நாடு கடத்தப்படுவதற்காக வைக்கப்படும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்களில் இவர்கள் கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. உதாரணமாக பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான டேவிந்தர் சிங், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டியதற்காக அங்கே உள்ள முகாமில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் அங்கே அகதிகள் முகாமில் கடுமையாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் வைத்துள்ளார். 18 நாட்கள் என்னை தடுப்பு காவலில் வைத்து இருந்தனர். நான் சீக்கியர். என்னுடைய மதத்தை அவமதிக்கும் விதமாக பேசினார்கள். என்னுடைய தலைப்பாகையை கூட தூக்கி வீசி கொடுமை செய்தனர். என்னுடைய மதத்தை அவமதிக்கும் விதமான செயல்களை செய்தனர். என்னுடைய தலைப்பாகையை அவர்கள் குப்பை தொட்டியில் வீசினார்கள்.18 நாட்கள் நரகம் போன்ற கொடுமைகளை அனுபவித்தோம், என்று டேவிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பிற 10 ஆசிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
சிலரை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்துவதில் அமெரிக்காவிற்கு சிரமம் இருப்பதால் பனாமாவிற்கு முதலில் நாடு கடத்துகின்றனர். முதலில் பனாமாவிற்கு நாடு கடத்திவிட்டு பின்னர் அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கோஸ்டாரிகாவில் இருந்து இவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். அதுவரை பனாமாவில் உள்ள கோஸ்டாரிகா ஹோட்டல் ஒன்றில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அங்கே இவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
1. அதன்படி அங்கே வசிக்கும் இந்தியர்கள் உட்பட பலர்.. தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளனர். 2. இந்தியர்கள் பலர்.. எங்களை காப்பாற்றுங்கள் என்று பேப்பரில் எழுதி அதை கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே காட்டி வருகின்றனர்.
3. நாடு கடத்தப்படும் நாங்கள்.. கொடுமைப்படுத்தப்படுகிறோம் என்றும் எங்களுக்கு உடைகள் கூட வழங்கப்படவில்லை. நாங்கள் கொண்டு சென்ற உடைகளை கூட பறிமுதல் செய்துவிட்டனர்.
கடும் குளிரில் மெல்லிசான உடையை அணிந்து கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்று அங்கே அடைத்து வைக்கப்பட்டு உள்ள இந்தியர்கள் புகார் வைத்துள்ளனர்.
10 நாட்களில் 322 இந்தியர்கள் நாடு அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.
விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது.
இதுவரை நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத்திகள், ஹரியானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த இராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும். ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்குள்ளானால் அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும்.
வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார். நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.