கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைஸலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில் இன்று (14) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தின் சாரதியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர், கொஸ்வத்த பொலிஸாரால் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.