குர்ஆனின் மூலம் கண்ணியம் பெற்ற இரு சகோதரிகள்: இம்மாதம் 27ம் திகதி உம்ரா பயணம்

Date:

அண்மையில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தேசிய அளவில் ஏற்பாடு செய்த புனித அல்குர் ஆன் மனனப் போட்டியில் கண் பார்வை இழந்த இரு பெண்கள் மிகச் சிறப்பான முறையில் வெற்றியடைந்தமை யாவரும் அறிந்ததே.

இந்த இரு சகோதரிகளும் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து இவர்களிடம் ‘பரிசாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட போது அதற்கு புனித மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றும் பாக்கியத்தைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்கள்.

இந்த கோரிக்கையின் விளைவாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியும் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சும் எடுத்த முயற்சியின் காரணமாக இந்த இரு கண்பார்வை இழந்த சகோதரிகளும் அவர்களுடைய பெற்றோர்களும் உம்ராவை நிறைவேற்றும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

இதேவேளை இந்த உன்னதமான ஏற்பாட்டிற்கு இரண்டு  பெண்களும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இந்த முயற்சி அவர்களின் அன்பான விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், புனித நூலான குர்ஆனை மனப்பாடம் செய்பவர்களுக்கு சவூதி அரேபியா வழங்கும் உன்னத மதிப்பாகும்.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்வதில் அதன் முன்னோடியான பங்கை பிரதிபலிக்கும் வகையில், புனித குர்ஆனை மனப்பாடம் செய்பவர்களை கௌரவிப்பதற்கும் அவர்களின் அந்தஸ்தை மேம்படுத்துவதற்கும் சவூதி அரேபியா மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...