இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவுசெய்யப்பட்டார்.
2025-2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (19)நடைபெற்றது.
“காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 21,000 பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணிகள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்” என்று சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார்
.
BASL இன் 29வது தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, PC செயல்பட்டார்