சூடான் உள்நாட்டுப் போர்: மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலி

Date:

சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

வடக்கு ஆப்பிரிக்க நாடானில் அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் அப்பாவிப் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப்படையினர் பதுங்கி இருந்து செயற்படுவதாக அந்த நாட்டின் இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் இராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து எறிகணைகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 நாட்களாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2023 ஆரம்பித்த சண்டையிலிருந்து 1.5 லட்சத்தில் இருந்து 5.2 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை வெள்ளை நைல் நதியைக் கடந்து தப்பிச் செல்ல முயன்ற கிராம மக்கள் மீது துணை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...