ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனவரி 09, 2025 அன்று, இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததற்காக, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்தது.
தீர்ப்பை அறிவித்த கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன, ரூ.1,500 அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ”இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று கூறி இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.