சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்ய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பொலிஸ் பிணவறையில், சஞ்சீவவின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவொன்றின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விட்ட நிலையில் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
மினுவங்கொடையைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி முன்வந்த போதிலும், அவரது குடும்பப்பெயரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சடலம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதேவேளை கணேமுல்ல சஞ்சீவவின் மனைவி இருந்தும் அவர் சடலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் முன்வரவில்லை என்றும் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது