நாடளாவிய ரீதியில் தாதியர்கள் இன்று வியாழக்கிழமை (27) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றையதினம் மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணம், வவுனியா,மட்டக்களப்பு, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் வைத்தியசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அரசே தாதியர்களிற்கு பட்ஜெட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு , 24 மணிநேரம் 365 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு குறைத்து ஏன்? போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டின் புதிய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.