நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில்

Date:

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் குளிரான காலநிலையை எதிர்பார்க்கலாம்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...