நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்: பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும், செயல்முறை இயல்பாக்கப்படும் என்றும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான பணிகள் ஏற்கனவே படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு தனது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இன்று கூடியபோது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதே முதன்மையான நோக்கமாக 24 மணி நேரமும் பயண அனுமதி வழங்கல் தொடங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடவுச்சீட்டு அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...