கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணியாக ஆண் ஒருவர் உட்பட வழக்கறிஞராக பெண் ஒருவரும் மாறுவேடமிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸார் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(19) காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிதாரி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.