அனைத்து பணயக் கைதிகளையும் இன்று முற்றாக விடுதலை செய்ய வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஹமாஸ்

Date:

காசாவிலுள்ள ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் விளைவாக ஏற்கனவே 5 குழுவினர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று 3 பேரை மட்டும் ஹமாஸ் விடுதலை செய்தது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் இன்றைய தினம் சனிக்கிழமை அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையைடுத்து ஹமாஸ் இயக்கம் இன்று மிகப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்து 3 பயணக் கைதிகளை மட்டும் விடுதலை செய்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மூவரும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேலும் 369 பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யவிருக்கிறது.

இன்றைய தினம் விடுதலையை பொறுத்தவரையில் பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் பல்வேறு வகையில் அழுத்தத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தது.

அல்கஸ்ஸாம் மற்றும் அல்குத்ஸ் இராணுவத்தின் பிரம்மாண்ட இராணுவ அணி வகுப்புக்கு மத்தியில் இந்த இஸ்ரேலிய பணயக் கைதி மூவரும் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் ஹமாஸ் போராளி குழுக்களில் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரம் மனிதாபிமான முறையில் பணயக்கைதிகளை ஹமாஸ் இயக்கம் கையாளுகின்றது என்பதையும் இன்றும் கூட 6வது குழுவில் விடுவிக்கப்பட்ட மூவரும் ஹமாஸ் இயக்கத்தை பாராட்டி கருத்து தெரிவித்தனர். அத்தோடு நெதன்யாகுவிடம் ஏனைய பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

உண்மையில் இன்றைய விடுதலை செய்யப்பட்ட இந்த மூவரையும் பொறுத்த வரையில் அவர்கள் மூவருக்கும் பெறுமதியான பரிசில்கள் ஹமாஸ் இயக்கத்தினால் வழங்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அந்த குழந்தைக்காக தங்க பரிசையும் வழங்கி அவர்களை மகிழ்ச்சிக்குட்படுத்தியிருக்கின்ற நிலையில் ஹமாஸ் தன்னுடைய மனிதாபிமான செய்தியையும் உலகத்திற்கு சொல்லியிருக்கிறது.

அதேவேளை இன்று விடுதலையாக்கப்பட்ட மூவரும் ஏற்கனவே விடுதலை வெய்யப்பட்டவர்கள் போலவே பூரண உடல்நலத்துடன் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியதன் மூலம் ஹமாஸ் எந்தளவு தூரம்  பணயக் கைதிகளை சிறப்பாக கையாளுகின்றது என்பதனை காணக்கூடிய வகையில் உள்ளது.

அதேவேளை  இஸ்ரேலுடைய சிறைகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற பலஸ்தீன கைதிகள் பல்வேறு சொல்லெணாத் துயரங்களுக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டு வருவதுடன் சிறைகளில் அனுபவித்த துயரங்களையும் வெளிப்படுத்தி வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.

அதேநேரம் விடுதலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு பலவந்தமாக டீசேர்ட் அணிவிக்கப்பட்டு அதில் ‘உங்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்’ என்ற கீழ்த்தரமான வாசகங்கள் எழுதப்பட்டு இஸ்ரேலுடைய நட்சத்திர சின்னத்தை பொறித்து கைதிகளை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இதன் மூலம் காசாவுடைய ஒவ்வொரு நிகழ்வும் உலகத்துக்கு பல்வேறு செய்திகளை சொல்லிக் கொண்டிருப்பதை உலகம் உணர்ந்து வருகின்றது.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...