அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்த பிறகு மத்திய கிழக்கில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று பலரும் நம்பினர்.
சவூதி அரேபியாவுடன் ட்ரம்பிற்கு நல்லுறவு இருக்கும் சூழலில், குறைந்தது சவூதி- இஸ்ரேல் இடையேயான பிரச்சினைகளாவது முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் கருத்தைச் சவூதி கூறியுள்ளது.
ட்ரம்ப் வருகைக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளிடையேயான பதற்றம் குறையும் என்றும் குறிப்பாகச் சவூதியுடன் இராஜதந்திர தொடர்பும் கூட ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ட்ரம்ப்பிற்கு சவூதி அரேபியா அனுப்பிய தகவல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். மத்திய கிழக்கில் இஸ்ரேல்- காசா சுற்றி உள்ள பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
காசா பகுதியில் வாழும் மக்கள் தனியாக தங்களுக்குப் பலஸ்தீனம் என்ற நாடு வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு மத்திய கிழக்கில் உள்ள இதர இஸ்லாமிய நாடுகளும் ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், இஸ்ரேல் இதை ஏற்பதாக இல்லை.
இதனால் எந்தவொரு அரபு நாடுடனும் இஸ்ரேலுக்கும் ராஜதந்திர ரீதியான உறவு இருப்பதில்ல. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்த பிறகு, நிலைமை மாறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் ஜனாதிபதிக்கும் ட்ரம்பிற்கும் இடையே நல்லுறவு உள்ள சூழலில், அதைப் பயன்படுத்தி இஸ்ரேல்- சவூதி இடையேயான உறவு சீராகும் எனச் சொல்லப்பட்டது.
இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சவூதி அரசு, 1967ஆம் ஆண்டு இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும் என்றும் அதுபோல பலஸ்தீனத்தை உருவாக்கும் வரை இஸ்ரேலுடன் எந்தவொரு இராஜதந்திர உறவுகளையும் வைத்திருக்க மாட்டோம் என்பதைச் சவூதி அரேபியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும், பலஸ்தீனியர்களை அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்றும் எல்லா விதமான முயற்சிகளையும் சவூதி அரேபியா எதிர்க்கும் என்றும் இந்த விவகாரத்தில் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்றும் சவூதி தெரிவித்துள்ளது.
இதுவரை பலஸ்தீனத்தை எந்தவொரு முக்கிய சர்வதேச அமைப்பும் உலக நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. எனவே, இதற்கான நடைமுறையை விரிவுபடுத்துமாறு சவூதி அரேபியா உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. பலஸ்தீன விவகாரத்தில் முகமது பின் சல்மானின் நிலைப்பாடு இதுதான் என்பதை அந்நாட்டு அரசு அமெரிக்காவிடமும் தெரிவித்துவிட்டது.