பலஸ்தீன மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் சித்திரவதை!

Date:

பலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்  இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்படுவதாக  கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்  இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு  குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.

 

162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பலஸ்தீன மருத்துவ அரசசார்பற்ற அமைப்பான சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவின் சிரேஸ்ட மருத்துவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், மோதல்களின் போது மருத்துவமனைகளில் கைது செய்யப்பட்ட24 பேர் காணாமல்போயுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் உட்பட பெருமளவு சுகாதார பணியாளர்களை தடுத்துவைத்திருப்பது சர்வதேச சட்டங்களின் சட்டவிரோதமான செயல் என சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவாத் அல்செர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணத்துவம் பராமரிப்பு போன்றவற்றை மறுப்பது பொதுமக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இந்த விதத்தில் இலக்குவைப்பது பலஸ்தீன மக்களிற்கான சுகாதார சேவை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் பெரும் துன்பங்கள் நிகழ்கின்றன இ தடுத்திருக்ககூடிய உயிரிழப்புகள் பல நிகழ்கின்றன, மருத்துவ நிபுணத்துவம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது  என தெரிவித்துள்ளார்.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் 297 சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உறுதி செய்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் எத்தனை பேர் விடுதலை செய்ய்பட்டனர்  என்ற புள்ளிவிபரங்கள் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்ற தகவலின் பின்னரே உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினரால் டிசம்பரில் கைது செய்யப்பட்ட கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹுசாம் அபு ஷபியாவினை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணியொருவர் ரமல்லாவில் உள்ள ஒவர் சிறைச்சாலையில் வைத்தியரை சந்திப்பதற்கு தனக்கு முதல் தடவை அனுமதி வழங்கப்பட்டதாகவும் தான் சித்திரவதை செய்யப்பட்டேன், தாக்கப்பட்டேன் தனக்கு மருத்துவசிகிச்சை மறுக்கப்பட்டது என மருத்துவர் தெரிவித்தார் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹுசாம் அபு ஷபியா கைதுசெய்யப்பட்டமைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...