பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்காலத்தில் சிரியாவின் விமான நிலைய சிறைச்சாலையில் 1000ற்கும் அதிகமானவர்கள் கொலை

Date:

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்காலத்தில் விமான நிலைய சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக  சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள இராணுவ விமான நிலையத்தின் சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிரிய மக்கள் கொல்லப்பட்டனர், என தெரிவித்துள்ள இந்த அறிக்கை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு போதிய உணவு வழங்கப்படாமல்  கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

ஏழு மனித புதைகுழிகளை ஆதாரமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் ,செய்மதி புகைப்படங்கள், ஜனாதிபதி அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான மெசேவில் உள்ள இராணுவவிமானதளத்தில் மீட்கப்பட்ட படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து  மனித புதைகுழிகளை அடையாளம் கண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சில மனித புதைகுழிகள் விமானநிலையத்திற்குள் உள்ளன  ஏனைய மனித புதைகுழிகள் தலைநகரின் புறநகர்பகுதிகளில் உள்ளன என சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திலும் மயானமொன்றிலும் உள்ள இரண்டு இடங்களில் நீண்ட புதைகுழிகள் வெட்டப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன இவை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் பொருந்துகின்றன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஷாடி கரோன் தானும் இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தமைக்காக 2011 முதல் 12வரை பல மாதங்கள் இந்தசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...