பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Date:

நாட்டில் பாதாள உலக கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

மேலும், 2023 ஆண்டில் 120 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 65 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்பதுடன் 2024 ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 56 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பழிவாங்கும் நோக்கத்தில் பாதாள உலகக் கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...