புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்

Date:

புத்தளம் வைத்தியசாலையின் அவிருத்தி தொடர்பில்  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், புத்தளம் சுகாதார அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும்  இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க , பிரதிப் பணிப்பாளர்  டொக்டர் ஸ்ரீதரன் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைஸல் தலைமையில் புத்தளம் சுகாதார அபிவிருத்தி குழு உறுப்பினர்களான எச்.எம்.ஹனான், முஹம்மது ஹிராஸ், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.சி.எம்.நபீல், முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.ஸன்ஹிர், தானிஸ் ஹனிபா, பி.எஸ்.எம்.ரிஷாட் ரஹ்மான், எம்.எச்.எம்.அஸ்கர், எம்.எஸ்.முஸப்பிர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் பற்றி இதன்போது அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், இந்த வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக மேம்படுத்துதல், தற்போதைய Master plan திட்டத்தை அங்கீகரித்து அதனை விரைவாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது

அத்துடன் புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி என்பது கடந்த பல ஆண்டுகளாக புத்தளம் மக்களின் கனவாக இருந்து வந்தாலும் முந்தைய அரசுகளால் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அமைச்சருக்கு புத்தளம் சுகாதார அபிவிருத்தி குழுவின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

எனவே, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் புத்தளம் மக்களின் கனவை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று  நம்புவதாகவும் புத்தளம் சுகாதார அபிவிருத்தி குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அனைத்தையும் கவனமாகச் செவிமடுத்த அமைச்சரும், அதிகாரிகளும் புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...