பெண் கல்வியின் சிகரம் தெமட்டகொட “கைரியா” கண்ட முப்பெரும் விழாக்கள்!!

Date:

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெமட்டகொட கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் பெண் கல்வி வரலாற்றில் ஒரு சிகரமாக கருதப்படுகின்ற ஒரு கல்விக் கூடமாகும்.

1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி கொழும்பு மாநகரின் தெமட்டகொட பிரதேசத்தில் மிகச்சிறப்பான கல்விப்பணியை தொய்வின்றி ஆற்றி வருகின்றது.

காலத்துக்கு காலம் அதிபர்களாக வருகின்ற பாடசாலை தலைமைத்துவங்களின் கீழ் இப்பாடசாலையானது பெற்றோர்களினதும் தனவந்தர்களினதும் ஒத்துழைப்போடு  அல்லாஹ்வின் பேரருளோடும் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது.

இப்பாடசாலை பல்வேறு சாதனைகளை படைக்கின்ற ஒரு பாடசாலையாக மிளிர்வது,பெண் கல்வியை ஊக்குவிக்கின்ற, பெண்களின் பங்களிப்பை சமூகத்தில் எதிர்பார்த்திருக்கும் சமூகத்துக்கு ஒரு சிறப்பான செய்தியாகும்.

அந்தவகையில் கடந்த 24 ஆம் திகதி கைரியாவினுடைய வரலாற்றில் மற்றொரு மைல்கல் என்று அடையாளப்படுத்தக் கூடிய 3 விழாக்களை இக்கல்லூரி அதனுடைய அதிபராக இருந்து அண்மைக்கால முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்து ஓய்வு பெறுகின்ற அதிபருடைய தலைமையின் கீழ் கொண்டாடியது.

முதலாவது நிகழ்வாக 12 கோடி ரூபா செலவில் ஸ்ரீ தம்ம மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பிரிவுக்கான கட்டம் திறந்து வைக்கப்பட்டது.

சயீதா பவுண்டேஷன் மூலமான நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தின் திறப்பு விழாவில் விசேட அதிதியாக சயீதா பவுண்டேஷனின் உறுப்பினரான கலாநிதி பாத்திமா சலீம் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன கூடத்தில் கைரியா பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிகளுக்கான விருதுகளும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் திறமைச் சித்தியடைந்த மாணவர்களுக்கான விருது வழங்கலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கலும்,  இப்பாடசாலை வரலாற்றில் மிகப்பெரும் பங்களிப்பை செய்து ஓய்வுபெறுகின்ற மும்மொழி வல்லுனரான அதிபர் ஏ.எல்.எஸ். நஸீராவுக்கான பிரியாவிடை நிகழ்வும் இதன்போது இடம்பெற்றன.

இம்மூன்று விழாக்களுக்கும் அதிதிகளாக சயீதா  பவுண்டேஷன் உறுப்பினர் பாத்திமா சலீம் கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நௌஸர் பௌஸி மற்றும் விசேட அதிதியாக கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பீ.ஆர். தேவபந்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பான தலைமைத்துவத்தினூடாக ஒரு பாடசாலையை சாதனை படைக்கின்ற  பாடசாலையாக மேலோங்கிய பாடசாலையாக செல்வாக்கு மிக்க பாடசாலையாக கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக தெமட்டகொட கைரியா பாடசாலை திழ்கின்றது என்றால் மிகையாகாது.

Popular

More like this
Related

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...