இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் சமூக சேவை பிரிவான UDS நிறுவனம் பல முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
ஊரிலுள்ள இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் “NIDHAHAS TROPHY” கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று தலேகோட மைதானத்தில் அது நடத்தியது.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தலேகொட பாதையை சுத்தப்படுத்தும் சிரமதான பணியும், கொங்க்ரீட் மூலம் வீதி செப்பனிடும் வேலைத்திட்டம் மேற்கொண்டன.
சுதந்திர தின நிகழ்வுகள் மதகுருமார்கள், பாடசாலை அதிபர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் பாடசாலை வளாகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற UDS நிறுவனத்தின் “இக்ரா” செயற்திட்டம் மூலம் சுமார் 145 மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டன. இதில் இக்ரஹ் பாடசாலை மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் மாணவர்கள் பயனடைந்தனர்.
மேலும், தலேகொட வீதிக்கு வீதி விளக்குகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வும், குருந்துவத்த கங்க இஹல கோரல பிரதேச செயலகத்துக்கு நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 

