அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்டம் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை (23) புத்தளம் முஹ்யித்தீன் ஜூமுஆ மஸ்ஜித்தில் மஃரிப் தொழுகையில் இருந்து இஷா தொழுகை வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் கலந்துகொண்டு விளக்கமளிக்கவுள்ளார்.
அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.