முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம்; விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை

Date:

பிரபல பாதாள உலகக் குழு தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தரங்க லக்மால் என்ற நபரால் இந்த படம் முகநூலில் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளமை சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...